Sunday, April 19, 2009
Wednesday, December 24, 2008
கடைக்கண் பார்வை
உன்னுள் அடக்கம்!

என் மனமே,
ஜாக்கிரதையாய் இரு!
எந்நேரமும் உன்னுள் ஆனந்த புயல் வீசலாம்..
அவன் மின்சாரப் பார்வை பட்டு.
என் இதயமே,
உன் துடிப்புகளை இப்பொழுதெல்லாம் என்னால் கேட்க முடிவதில்லையே? காரணம் .. நீ அவனிடம் இருப்பதால் தானோ?
என் உயிரே,
உன் உடம்பு வெறும் காற்றில்லா பெட்டகம் தானோ?
உணர்வுகள் நிகழ்வில் நில்லாமல்,
கனவுலகில் நினைவாக சஞ்சரிப்பதால் தான் ஏனோ..
என் உயிரே ! உனை அவன் கண்களில் தேடுகிறேன்.
Thursday, December 11, 2008
Wednesday, March 19, 2008
Tuesday, March 18, 2008
Monday, March 17, 2008
...கனவே கலைந்துவிடு !!
மருந்தென நினைத்து விஷத்தை அருந்திவிட்டேன்.. துடிக்கிறேன் ..தவிக்கிறேன் .. இதயம் வலிக்க !பறக்க நினைத்து .. கூண்டை எறித்தேன் .. சிறகுமல்லவா சேர்ந்து எறிந்தது !
வெற்றிப் படிகளில் ஏறும் வாய்ப்பு உண்டு.. ஆனால் கால்கள் இன்றி அமைதியாய் அழுகின்றேன்...அழுகின்றேன் ...
நிசப்தம் கலைந்தது .. நிதானம் பிறந்தது .. நிகழ்வு அல்ல .. கனவும் அதிபயங்கரம் என்றுண்ர்ந்தேன் !
Tuesday, March 11, 2008
Monday, March 10, 2008
....ஒரு மிஸ்ஸ்ட் கால் !
நான் விழித்துவிட்டேன்;
என்னிடம் பணம் காலி..
ஒரு முறை எனைக் கூப்பிடு;
மிஸ்ஸ்ட் கால் !
வீடு சென்று சேர்ந்துவிட்டேன் அன்பே,
நீ இன்னும் வராமல் என்ன செய்கிறாய்?
ஆஹா ! .. எத்தனை எத்தனை அர்த்தங்களில் .. இந்த ஒரு மிஸ்ஸ்ட் கால் ?
வார்த்தைகளை அநியாயமாய் சுருக்கி,
வருமானத்தை அதிகமாய் பெருக்கும்..
மாடர்ன் உலகின் .. அழகிய மிஸ்ஸ்ட் கால் !
Tuesday, March 4, 2008
இதமாய்..ஒரு தீண்டல்
சுட்டெரித்த கத்தரி வெயிலில்.. ஜில் ஜில் பார்வையால்..
இதயத்திற்கு சொற்கம் காட்டினாய் !
பெண்ணே,
உன் விழிகள் என்னை,
இதமாய் தான் தீண்டின..
அதற்கே இப்படி ஆனேனோ!
Monday, April 23, 2007
Thursday, April 19, 2007
வருந்துகிறேன் உனக்காய்..

சிரு சிரு நிமிடங்கள் சேர்த்தேன்
சின்ன சின்ன ஆசைகள் வளர்த்தேன்
வாழ்க்கை யெனும் பூங்கா அமைக்க,
உயிரே உயிரே என்னை பிரிந்ததேனோ
பழயன கழிதல் எனக்கும் பொருந்துமோ!
புதியவளாய் அவள் உன் வாழ்வில்..
..துடிக்கிறேன் நான் எனக்காய் அல்ல,
என்னை இழந்த முட்டாளே உனக்காய்!
என் ஆழ்ந்த அனுதாபங்க்ள்
நீ இழந்த பெரும் வாழ்விற்காய்!
ஒருமுறை மனக்கதவுகளை திறந்தேன் நான்
ஒரு சுனாமியை போல்,எட்டி பார்த்து சென்றாய்..
அழுகையில்லை...கண்ணீரில்லை...
லேசாய் ஒரு வலி மட்டும்!
தாழிடுகிறேன் கோட்டை கதவுகளை
நிரந்தரமாய்..நிரந்தரமாய்..நிரந்தரமாய் !!!
சின்ன சின்ன ஆசைகள் வளர்த்தேன்
வாழ்க்கை யெனும் பூங்கா அமைக்க,
உயிரே உயிரே என்னை பிரிந்ததேனோ
பழயன கழிதல் எனக்கும் பொருந்துமோ!
புதியவளாய் அவள் உன் வாழ்வில்..
..துடிக்கிறேன் நான் எனக்காய் அல்ல,
என்னை இழந்த முட்டாளே உனக்காய்!
என் ஆழ்ந்த அனுதாபங்க்ள்
நீ இழந்த பெரும் வாழ்விற்காய்!
ஒருமுறை மனக்கதவுகளை திறந்தேன் நான்
ஒரு சுனாமியை போல்,எட்டி பார்த்து சென்றாய்..
அழுகையில்லை...கண்ணீரில்லை...
லேசாய் ஒரு வலி மட்டும்!
தாழிடுகிறேன் கோட்டை கதவுகளை
நிரந்தரமாய்..நிரந்தரமாய்..நிரந்தரமாய் !!!
Thursday, April 12, 2007
நானும் ஒரு கலிலியோ....
Tuesday, March 27, 2007
Monday, December 18, 2006
கணபதி பப்பா மோரியா
சக்தியின் வடிவே சரணம் உமக்கே
சாந்தியும் நீயே சரணமும் நீயே
சிவன் பார்வதி தன்னை சுற்றி வந்த மூலவா
ஆதியும் நீயே அந்தமும் நீயே
அக்னி கொளுந்தே அருட்பெருஞ்ஜோதியே
உன் திருவடிப்பாதம் தன்னை அடயவழி ஒன்றை சொல்வாய்ஞானவடிவே ...ஒலியான என் திருமூர்தியே
ஓம் எனும் நாமம்விருட்சகம் போல் எனை காக்க
அருட்புரிவாயே தினமும் நீயே
விநாயகநே வின்நாயகநே
சரணம் சரணம் சரணம் உமக்கே !
தாய்மை ( Motherhood )
மகளே...நீ சுவாசிக்கும் ஒவ்வொரு முறையும்
என் கனவுக் கோட்டை வளர்ந்து வருகின்றது,
அதை நிறைவு செய்யாவிடினும்
அழித்து விடாதே.. ==============================================
For all my non-tamil friends,here it goes..
My dearest babydoll,
With every breath of yours,
Iam building a castle of my dreams about you,
Even if you dont turn them into a reality,
Plz be careful not to destroy my beautiful castle.
Subscribe to:
Posts (Atom)













