என் மனமே,
ஜாக்கிரதையாய் இரு!
எந்நேரமும் உன்னுள் ஆனந்த புயல் வீசலாம்..
அவன் மின்சாரப் பார்வை பட்டு.
என் இதயமே,
உன் துடிப்புகளை இப்பொழுதெல்லாம் என்னால் கேட்க முடிவதில்லையே? காரணம் .. நீ அவனிடம் இருப்பதால் தானோ?
என் உயிரே,
உன் உடம்பு வெறும் காற்றில்லா பெட்டகம் தானோ?
உணர்வுகள் நிகழ்வில் நில்லாமல்,
கனவுலகில் நினைவாக சஞ்சரிப்பதால் தான் ஏனோ..
என் உயிரே ! உனை அவன் கண்களில் தேடுகிறேன்.