மயானமாகியது பெண்ணே,
என் மனம்,நீ 'இல்லை' என்று சொன்ன பதிலில்!
புல்வெளியில் பனித்துளியாய்..
இதோ,புதியவளின் கடைக்கண் பார்வை.
வெற்றிப் படிகளில் ஏறும் வாய்ப்பு உண்டு.. ஆனால் கால்கள் இன்றி அமைதியாய் அழுகின்றேன்...அழுகின்றேன் ...
நிசப்தம் கலைந்தது .. நிதானம் பிறந்தது .. நிகழ்வு அல்ல .. கனவும் அதிபயங்கரம் என்றுண்ர்ந்தேன் !
நான் விழித்துவிட்டேன்;
என்னிடம் பணம் காலி..
ஒரு முறை எனைக் கூப்பிடு;
மிஸ்ஸ்ட் கால் !
வீடு சென்று சேர்ந்துவிட்டேன் அன்பே,
நீ இன்னும் வராமல் என்ன செய்கிறாய்?
ஆஹா ! .. எத்தனை எத்தனை அர்த்தங்களில் .. இந்த ஒரு மிஸ்ஸ்ட் கால் ?
வார்த்தைகளை அநியாயமாய் சுருக்கி,
வருமானத்தை அதிகமாய் பெருக்கும்..
மாடர்ன் உலகின் .. அழகிய மிஸ்ஸ்ட் கால் !