பாறையில் பூத்த ரோஜாக்கள் ..
குப்பை தொட்டியில் பிஞ்சுகள் !
வெற்றிப் படிகளில் ஏறும் வாய்ப்பு உண்டு.. ஆனால் கால்கள் இன்றி அமைதியாய் அழுகின்றேன்...அழுகின்றேன் ...
நிசப்தம் கலைந்தது .. நிதானம் பிறந்தது .. நிகழ்வு அல்ல .. கனவும் அதிபயங்கரம் என்றுண்ர்ந்தேன் !
நான் விழித்துவிட்டேன்;
என்னிடம் பணம் காலி..
ஒரு முறை எனைக் கூப்பிடு;
மிஸ்ஸ்ட் கால் !
வீடு சென்று சேர்ந்துவிட்டேன் அன்பே,
நீ இன்னும் வராமல் என்ன செய்கிறாய்?
ஆஹா ! .. எத்தனை எத்தனை அர்த்தங்களில் .. இந்த ஒரு மிஸ்ஸ்ட் கால் ?
வார்த்தைகளை அநியாயமாய் சுருக்கி,
வருமானத்தை அதிகமாய் பெருக்கும்..
மாடர்ன் உலகின் .. அழகிய மிஸ்ஸ்ட் கால் !